கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகரில், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. நன்னனின் ஆளுகைக்குட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது. ...