அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை - 642104, கோயம்புத்தூர் .
Arulmigu Masaniamman Temple, Anaimalai - 642104, Coimbatore District [TM009759]
×
Temple History
தல வரலாறு
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகரில், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. நன்னனின் ஆளுகைக்குட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது. ...கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகரில், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. நன்னனின் ஆளுகைக்குட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஒருநாள் ஆற்றில் தன் ஒத்த இளவயது பெண்களோடு நீராட வந்த ஒரு இளம்பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டதனை அறிந்த நன்னன் அப்பெண்ணை கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டதால், அவளது தந்தை தனது மகளின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் செலுத்துவதாக கூறியும் அதனை ஏற்காமல் அப்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும், கொலையுண்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்தப் பெண் போன்ற ஒரு உருவத்தை அமைத்து மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்தபெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டு வழிபட்டு வரப்படுகிறது என செவிவழி செய்தி வாயிலாக அறிய வருகிறது.